Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 07-02-2021

மேஷம்: இன்று நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

ரிஷபம்: இன்று குடும்பத்தின் மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமையான பேசி பொழுதை கழிப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்: இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். காரிய அனுகூலம் உண்டாகும். ஏதாவது மனகவலை இருக்கும். ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்: இன்று எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

சிம்மம்: இன்று தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கன்னி: இன்று சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

துலாம்: இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

விருச்சிகம்: இன்று குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

தனுசு: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மகரம்: இன்று பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கும்பம்: இன்று மனதில் உற்சாகம் உண்டாகும். மன அமைதி ஏற்படும். வாழ்க்கை சிறப்படையும். திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சந்திரன் சஞ்சாரத்தால் வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5

மீனம்: இன்று நன்மை ஏற்படும். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கை யாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

admin

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

3 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

6 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

6 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

7 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

8 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

8 hours ago