Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 31– 08 – 2023

மேஷம்: இன்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

ரிஷபம்: இன்று புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறமுடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் அமையும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்: இன்று குடும்ப வாழ்வில் இருந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்த மங்கையருக்கு திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கடகம்: இன்று பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடந்தகால கடன்கள் யாவும் விலகி கண்ணியமிக்க வாழ்க்கை அமையும். செல்வம், செல்வாக்கு, உயரும் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

சிம்மம்: இன்று உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய நேரம். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கௌரவமிக்க மாண்புமிகு பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி: இன்று முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

துலாம்: இன்று சில புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் பணியாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

விருச்சிகம்: இன்று தொழிலில் இருந்துவந்த மந்தநிலைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியும் தக்கசமயத்தில் அமையும். அரசுவழியில் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

தனுசு: இன்று மனைவி, பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். புதிய வீடுகட்டி குடிபுகும் யோகமும் வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்: இன்று தடைப்பட்ட சுபகாரியங்கள் யாவும் தடபுடலாக நடைபெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும். கூட்டுத்தொழிலிலும் நல்ல லாபம் அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கும்பம்: இன்று கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்களின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம்: இன்று உங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். பூர்வீக சொத்துகளாலும் சாதகமான பலனைப் பெறமுடியும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

 

admin

Recent Posts

எளிமை மாறாதவர்..! – கார்த்தி குறித்து நெகிழ்ந்த சர்தார் 2 நாயகி ஆஷிகா ரங்கநாத்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…

23 hours ago

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – ‘மண்டாடி’ படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…

24 hours ago

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ மனு!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…

24 hours ago

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…

1 day ago

மண்டாடி திரை விமர்சனம்

ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

1 day ago

Higher Promo Song

Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…

1 day ago