Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 31– 07 – 2022

மேஷம்: இன்று எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. தடை தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

ரிஷபம்: இன்று எல்லோரையும் வசீகரிக்கும் இயல்பு அதிகரிக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மிதுனம்: இன்று சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கடகம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்: இன்று வாழ்க்கையில் முன்னேற சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கன்னி: இன்று நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

துலாம்: இன்று இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

விருச்சிகம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

தனுசு: இன்று மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். மனதில் உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மகரம்: இன்று எடுத்த காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கும்பம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

மீனம்: இன்று எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

 

admin

Recent Posts

Muthe Video Song

Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…

1 day ago

Nova Trailer

Nova – Phase 1: The Arrival - Trailer | Raiza Wilson | Dhurva | Sendrayan…

1 day ago

Karuppa Kooda Va Lyric Video

Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar |…

1 day ago

மொரிஷியஸுக்கு சென்ற ஹன்சிகா

கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல…

1 day ago

கருப்பு படத்தில் ‘ப்ரீத்தி’யாக த்ரிஷா!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு…

1 day ago

நடிகை சிம்ரன் அடுத்த பட அப்டேட் வெளியிட்ட விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’…

1 day ago