Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 29 – 01 – 2022

மேஷம்: இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். குடும்பத்தை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தாய் தந்தையரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்புநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்: இன்று பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு ஆயத்தமாவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்: இன்று காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கன்னி: இன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். புதிய நண்பர்களின் நட்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

துலாம்: இன்று அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

விருச்சிகம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

தனுசு: இன்று கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மகரம்: இன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அறிவுத் திறன் கூடும். பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கும்பம்: இன்று ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்: இன்று மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

 

 

admin

Recent Posts

எளிமை மாறாதவர்..! – கார்த்தி குறித்து நெகிழ்ந்த சர்தார் 2 நாயகி ஆஷிகா ரங்கநாத்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…

5 hours ago

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – ‘மண்டாடி’ படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…

5 hours ago

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ மனு!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…

5 hours ago

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…

6 hours ago

மண்டாடி திரை விமர்சனம்

ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

7 hours ago

Higher Promo Song

Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…

8 hours ago