Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 28 – 06 – 2021

மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

ரிஷபம்: இன்று வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

மிதுனம்: இன்று உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும். எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

கடகம்: இன்று குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற மிகவும் கவனமாக பாடங்களை படிப்பீர்கள்.மனகுழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

சிம்மம்: இன்று பணபற்றாக்குறை நீங்கும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி: இன்று சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். காரிய வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோதைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

துலாம்: இன்று தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். பதவி உயர்வு கிடைக்கக்கூடும். இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டம், சுகம் இரண்டும் ஏற்படலாம். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

விருச்சிகம்: இன்று பணவரத்து அதிகரிக்கும். செயல்திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

தனுசு: இன்று அடுத்தவர் யாரும் குறைகூறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

மகரம்: இன்று லாபகரமாகவும் இருக்கும். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். பயணங்களால் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்: இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடுவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்: இன்று தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப் பெண் பெற முயற்சி செய்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

admin

Recent Posts

இட்லி கடை : தனுஷ் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

2 hours ago

கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீங்க. அஜித் சொன்ன தகவல்.!!

அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

3 hours ago

வித்யாவிடம் மீனா கேட்ட கேள்வி, மனோஜ் சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…

6 hours ago

திணை அரிசியில் இருக்கும் நன்மைகள்.!!

திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

20 hours ago

The Raja Saab Tamil Trailer

The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…

21 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து பேசிய டைட்டில் வின்னர் ராஜு..!

குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

1 day ago