Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 27– 11 – 2022

மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.லாபம் அதிகரிக்கும் நாள். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

ரிஷபம்: இன்று தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான நாள். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காணும் நாள்.கலைத்துறையினருக்கு விருதுகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாது. கடின உழைப்பு காரிய வெற்றியைத் தேடித்தரும். வெளியூர் சென்றுவர நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

மிதுனம்: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரிகளுக்கு காரிய தடை ஏற்படலாம். கவனம் தேவை. காரிய அனுகூலம் உண்டு. ஆனால் தாமதப்படும். எதிர்ப்பார்த்த பணவரவு தாமதமாக கிடைக்கும். கூட்டுத் தொழிலாளிகள் லாபம் அடையும் நேரம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கடகம்: இன்று கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். காரியவெற்றி உண்டாகும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும். மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பண வரத்து உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்: இன்று பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். காரியவெற்றி உண்டாகும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும். மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பண வரத்து உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கன்னி: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். விளையாடும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1,2

துலாம்: இன்று மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த காரியத்தையும் ஆலோசித்து செய்வது நல்லது. ஆன்மீக போக்கு மனதிற்கு நிம்மதியைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம்: இன்று அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு: இன்று ஆர்டர்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மகரம்: இன்று பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.விவசாயிகள் எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கும்பம்: இன்று திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவை உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

மீனம்: இன்று தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.குடும்பத்தில் அக்கறை காட்டும் நீங்கள் கவலை, பயம் இல்லாமல் செயல்படக்கூடியவர். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனகவலை ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

 

 

admin

Recent Posts

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…

5 hours ago

அரசன் படத்தில் சமுத்திரக்கனி.. அவரே கொடுத்த அப்டேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…

7 hours ago

நீங்கள் யாருடைய ரசிகர்.. அனிருத் சொன்ன க்யூட்டான பதில்..!

தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…

11 hours ago

தலைவர் 173 : ரிலீஸ் எப்போது தெரியுமா?வெளியான சூப்பர் தகவல்.!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…

11 hours ago

சிந்தாமணி போட்ட திட்டம்.. கண் கலங்கிய மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

16 hours ago

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

1 day ago