மேஷம்: இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன் படுத்தி முன்னேறுவீர்கள். மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். அடுத்தவர் யாரும் குறைகூறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
ரிஷபம்: இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். உதவிகளின் மூலம் வெற்றி காணும் காலம்
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
மிதுனம்: இன்று ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடுவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். பெண்கள் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
கடகம்: இன்று வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும்.பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
சிம்மம்: இன்று மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். எதற்கும் கலக்கமோ, அதிர்ச்சியோ அடைய வேண்டாம். வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வியாபரிகள் ஆர்டர்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம்.மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும். நன்கு படிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
கன்னி: இன்று வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் மாதமிது. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியன சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
துலாம்: இன்று புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காணும் காலம். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7
விருச்சிகம்: இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியம் உடைய எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவை உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
தனுசு: இன்று பணவிஷயத்தில் சிக்கனத்தை கடை பிடிப்பபீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விளையாட்டு கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள்.உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
மகரம்: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
கும்பம்: இன்று திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
மீனம்: இன்று தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவீர்கள். மன நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…
Bum Baa Diga Diga Music Video | DC | Lokesh | Sun Pictures | Anirudh…
Thedal Thodarudhey Lyrical Video | Yen Ennai Edho Seidhai | D Anthony | Jaikar Harinath…
Nee Sel Video | The India Story | Kajal Aggarwal Kitchlu,Shreyas Talpade | Mangesh D…
Adiye En Poonthene Lyrical Video | Jana Nayagan | Hon’ble CM Vijay | Pooja Hegde…
Sengathiye Lyrical Video | Delivery Boy | Leo Sivakumar | Brigida Saga | Nani |…