Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 20– 04 – 2023

மேஷம்: இன்று தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும். பொருளாதார திட்டங்களில் அவசரம் காட்டாமல் நிதானமாக யோசித்து செய்வது நல்லது. வரவேண்டிய பணத்தை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எந்திரங்களை இயக்கும் போதும் ஆயுதங்களை பயன்படுத்தும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மிதுனம்: இன்று குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் சில்லறை சண்டைகள் ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் கூறியபடி நடக்கவில்லையே என்ற கவலை உங்களுக்கு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கடகம்: இன்று பணவரத்து கூடும். எதிர்பார்த்த தகவல் தாமதமாக வரும். ஏதாவது கவலை மனதில் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பாடங்களில் சந்தேகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

சிம்மம்: இன்று மனகவலை நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் உண்டாகும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

கன்னி: இன்று வீண் அலைச்சல் அதனால் கண்விழிக்கும் நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவு வரலாம். நிர்பந்தமாக வெளியூர் செல்ல நேரிடும். அடுத்தவர்கள் விவகாரத்தில் ஈடுபடுவதால் சிக்கல் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்: இன்று தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் ஏற்படும். உற்சாகமாக செயல்பட்டு புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பீர்கள். அதே நேரத்தில் போட்டியும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

விருச்சிகம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் மறைமுகமாக சில பிரச்சனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தனுசு: இன்று கணவன் மனைவிக்கிடையே பரஸ்பரம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. திடீர் செலவு உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்க்க திட்ட மிட்டு செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மகரம்: இன்று மாணவர்கள் உற்சாகமாக செயல்பட்டு பாடங்களை படிப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்: இன்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதில் முழுகவனத்தையும் செலுத்துவீர்கள். காரியதாமதம், அதனால் மனக் கவலை ஏற்படலாம். வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். அதனால் அடுத்தவரின் பகைக்கு ஆளாக நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்: இன்று பணவரத்து அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தடையும்,தாமதமும் ஏற்படலாம். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 

admin

Recent Posts

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

19 hours ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

22 hours ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

22 hours ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

22 hours ago

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…

23 hours ago

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி!

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…

23 hours ago