Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 02-08-2020

மேஷம்: இன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்: இன்று தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்: இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்: இன்று நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

சிம்மம்: இன்று குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்øடை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி: இன்று வயிறு கோளாறு ஏற்படலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல் பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

தனுசு: இன்று கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மகரம்: இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும். மனோ பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்: இன்று பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்: இன்று உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

admin

Recent Posts

Haiku Official Trailer

Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…

9 hours ago

Drones Official Trailer

Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…

9 hours ago

கண்டிப்பான அம்மாவாக இருக்க மாட்டேன்! – எதிர்கால குழந்தைகள் குறித்து நடிகை தமன்னா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…

16 hours ago

தினமும் 15 முறை ‘I Love You’ சொல்வாள்.. ராஷ்மிகா குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…

16 hours ago

ஆமாம், நான் கருப்புதான்.. உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ கொடுத்த பதிலடி!

திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…

16 hours ago

சஞ்சய் தத்தின் ‘பிரதமர்’ பேச்சு.. இணையத்தில் சர்ச்சை – விளக்கம் அளித்த நடிகர்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…

16 hours ago