Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 16– 08 – 2021

மேஷம்: இன்று கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

ரிஷபம்: இன்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். சக ஊழியர்கள் மூலம் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மிதுனம்: இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து வியாபாரம் வளர்ச்சி பெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்:  4, 6

கடகம்: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உழைத்த உழைப்பிற்கு மேலிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். வேலை தேடி அலைபவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்:  2, 9

சிம்மம்: இன்று முன்னேற்றங்கள் உண்டாகும். முயற்சிகள் சாதகமானபலன் பெறும். ஆனால் வாகனங்களில் செல்லும் போதும் எந்திரங்களை கையாளும் போதும் தீ, மின்சாரம் ஆகியவற்றிலும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பணம் இருந்தும் தேவையான நேரத்தில் கிடைக்காத நிலை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்:  9, 3

கன்னி: இன்று வீண் அலைச்சல் திடீர் டென்ஷன் ஏற்படலாம். காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டுபின்னர் முடியும். உடல் பலவீனம் உண்டாகலாம். சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் சுகமும், நிம்மதியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்:  4, 6

துலாம்: இன்று பதவி மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகலாம். கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி நிம்மதியான தூக்கம் வரும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வந்து வந்து போகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

விருச்சிகம்: இன்று மனகஷ்டம், பணகஷ்டம் தீரும். உடல் ஆரோக்யம் உண்டாகும். சிலருக்கு வசதியான வீடு அமையும். எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுமுகமானநிலை உண்டாகும். எதிரிகள் தொல்லை குறையும். வியாபாரம், தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்:  3, 7

தனுசு: இன்று எங்கும் எதிலும் நன்மையே உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கல காரியங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். போட்டி பந்தயங்களில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்கள்:  1, 7

மகரம்: இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாள். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 4, 5

கும்பம்: இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்:நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்:  5

மீனம்: இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும் இனிமையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண்விவாதம் ஏற்படலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

admin

Recent Posts

இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

15 hours ago

அஜித் 64 படத்திற்கு சம்பளத்தை உயர்த்திய அஜித்..!

சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…

17 hours ago

குஷி படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்போகும் விஜயின் ஹிட் திரைப்படம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…

17 hours ago

ஜனநாயகன் படம் எப்படி இருக்கும்..H.வினோத் கொடுத்த தரமான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…

21 hours ago

வருத்தப்பட்ட கிரிஷ் பாட்டி, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…

24 hours ago

சூர்யாவை பார்த்த சுந்தரவல்லி, வலியில் துடிக்கும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 day ago