Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 16– 07 – 2023

மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

ரிஷபம்: இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். உத்தியோகம் தொடர்பான கவலைகள் நீங்கும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

மிதுனம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிரச்சினைகள் அதிகம் இருக்கும். ஆனால் எதிர்நீச்சல் போட்டு அவற்றை சமாளிப்பீர்கள். மற்றவர்கள் ஒதுக்கிவைத்த கடினமான வேலையையும் வெகு இலகுவாகவும் சீக்கிரமாகவும் செய்வீர்கள். முரட்டு சுபாவம் இருந்தாலும், ரகசியம் காப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்: இன்று பணவரவு புதிய இனங்களில் வந்துசேரும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தம்பி, தங்கை உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பர். வீடு, வாகனத்தில், நிலம் ஆகியவற்றில் தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

சிம்மம்: இன்று குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்களால் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். உடல்பலம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6

கன்னி: இன்று தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து வந்த பகையுணர்வு நீங்குவதோடு உதவியும் கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண முயற்சி எளிதில் நிறைவேறும். திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்: இன்று வியாபாரிகள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். தொழிலதிபர்களும் விறுவிறுப்புடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கிளை துவங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும். தனவரவு பெருகும். லட்சியங்கள் நிறைவேறும். பேரும் புகழும் கிடைக்கும். வளமான வாழ்க்கை பொற்காலமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

விருச்சிகம்: இன்று அற்புதமான திருப்பங்கள் அவ்வப்போது நிகழும். கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கு விற்பனை கூடுவதுடன் அடிக்கடி வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

விருச்சிகம்: இன்று அற்புதமான திருப்பங்கள் அவ்வப்போது நிகழும். கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கு விற்பனை கூடுவதுடன் அடிக்கடி வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மகரம்: இன்று பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத்தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்: இன்று உறவினர்களில் மத்தியில் அந்தஸ்து கூடும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து தரத்தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். பணவசதி சீராக கிடைத்து வரும். சக வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகநேரம் ஒதுக்கி அக்கறையுடன் படிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

மீனம்: இன்று படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

 

admin

Recent Posts

பிக் பாஸ் சொன்ன வார்த்தை, வருத்தப்பட்ட துஷார், வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

6 minutes ago

தாய்ப்பாலில் இருக்கும் நன்மைகள்..!

தாய்ப்பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக…

14 hours ago

இயக்குநரான நடிகர் விஷால்! –

இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக்…

20 hours ago

காந்தாரா 2 படத்தின் 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?? வெளியான தகவல்

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

21 hours ago

சபரி சொன்ன வார்த்தை, பார்வதி கொடுத்த பதில், வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

21 hours ago

Bison Kaalamaadan Trailer

Bison Kaalamaadan Trailer | Dhruv, Anupama Parameswaran | Mari Selvaraj | Nivas K Prasanna

22 hours ago