Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 15– 07 – 2023

மேஷம்: இன்று இறைவனை நம்புவீர்கள். சோதனைகளை உரத்த நெஞ்சோடு எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்: இன்று விருந்து விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் வரலாம் புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதுநல்லது. இளைய சகோதர சகோதரிகளின் மூலம் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்: இன்று நன்மைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பணப் பிரச்சனைகளில் உங்களை திக்குமுக்காட வைத்தாலும் அவ்வப்போது பணவரவிற்கு குறையிருக்காது. குடும்பச் செலவுகளை எப்படியும் சமாளிக்க வாழ்க்கைத்துணை உதவுவார். பூர்வீக பிதுரார்ஜித சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கடகம்: இன்று வளமும் வசதியும் அதிகரிக்கும். தம்பதியினர் இடையே அன்பு மேம்படும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிரச்சினை இருக்காது. பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணலாம். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். புதிய வாகனங்கள் வாங்கலாம். உடல்நலனை பொறுத்தவரை சுமாராக இருக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்: இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்க நிலை மறையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கும். ஏற்கனவே செய்த தவறுகளை திருத்திக் கொள்ள பார்ப்பீர்கள். நல்வழி காட்ட நல்லவர்கள் வருவார்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி: இன்று கடன் வாங்க வேண்டி வந்தாலும் அனைத்தையும் திருப்பி அடைப்பதற்குண்டான வழி ஏற்படும். நஷ்டம் ஏற்படும் என நினைத்திருந்த மனக்கவலைகள் அனைத்தும் தீரும். உத்தியோகத்தில் வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை பளு குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்: இன்று இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். இடமாற்ற பீதி மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலர் தொய்வு நிலையில் இருந்து விடுபடுவர். வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். வேலையில் சிலருக்கு வெறுப்பு வரலாம். எனவே மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்: இன்று உடன் இருந்து தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். வெற்றி பெறும் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறப் போகிறது. வியாபாரிகள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு: இன்று அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்: இன்று உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். மேற்படிப்பில் எதிர்பார்த்திருந்த துறை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கும்பம்: இன்று புதிய நிலம் வாங்கலாம். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் சேரும் முன் எச்சரிக்கை தேவை. நினைக்கின்ற காரியங்களனைத்தும் சுணக்கமின்றி நடைபெறும். போட்டி பொறாமை எதிர்ப்புகளை சிறப்பாக சமாளித்து விடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்: இன்று உங்களுடைய வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ள எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

 

admin

Recent Posts

பைசன்: 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

24 minutes ago

பேச வந்த கம்ருதீன்.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…

43 minutes ago

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, போட்டியாளர்களின் பதில் என்ன? வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

49 minutes ago

Ladies Hostel Pooja & Press Meet

https://youtu.be/x0H-cUHVIic?t=1

3 hours ago

Thadai Athai Udai Audio Launch

https://youtu.be/lewVy1-jb6E?t=2

1 day ago