Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 11-06-2020

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் (11-06-2020) இதோ…

மேஷம் : வெற்றி பெரும் மனஉறுதியுடன் இன்று இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். தியானம் மற்றும் இறை வழிபாடு உங்களுக்கு மன ஆறுதலை தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம் : இன்று உற்சாகமாக இருப்பீர்கள். வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். மனஉறுதியுடனும், தைரியத்துடனும் இன்று நீங்கள் சாதிப்பீர்கள். எதிரிகளை வெல்லும் நாள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம் : உங்களுக்கு தேவையான பலன்கள் இன்று கிடைக்காது. மனதினை மகிழ்ச்சியாக வைத்து கொண்டால் இன்றைய நாளை உங்களுக்கானதாக்கி கொள்ளலாம். பிரார்த்தனை மற்றும் இறைவழிபாடு மனஆறுதலை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம் : இன்று திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறிது கவலை அளிக்கலாம். அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். நீங்கள் எதிர்பார்காத நன்மைகள் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தை கொண்டு இன்றைய நாளை உங்களுக்கானதாக மாற்றி கொள்வீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி : இன்று உங்களுக்கான நாள். உறவினர்கள் வருகை இருக்கலாம். அதனால் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சவாலானதாக இருக்கும். பதட்டமாக காணப்படுவீர்கள்.எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். சவாலான சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம் : உங்கள் முயற்சிகளில் தடைகள் காணப்படும். அதனால் சிறிது வருத்தமாக காணப்படுவீர்கள். இன்று நீங்கள் அமைதியின்றி பதட்டமாக காணப்படுவீர்கள். பிரார்த்தனையும், தியானமும் மனநிறைவை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு : இன்று வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். உங்களிடம் ஆர்வம் அதிகமாக காணப்படும். நீங்கள் முடிவுகள் எடுப்பதில் திடமாக இருப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மகரம் : அனுசரித்து நடந்துகொண்டால் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறும் நாள். இறைவழிபாடு மற்றும் தியானமும் மன ஆறுதலை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம் : வளர்ச்சி குறைவாக இருக்கும் நாள். இன்றைய நாள் உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களுக்கு சாதகமான பலன்களை பெறுவீர்கள். வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாகவும் திடமாகவும் செயல்படுவீர்கள். இன்றைய நாளை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் பொது விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் உங்களின் நட்பு வட்டாரம் பெருகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

admin

Recent Posts

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

3 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

3 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

4 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

4 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

4 hours ago

Meesaya Murukku 2 Official Trailer

Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar

21 hours ago