மேஷம்: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தடையின்றிக் கிட்டும். சில நேரங்களில் வேலைப் பளு அதிகரித்து நிறைய நேரம் உழைக்க வேண்டியிருந்தாலும் அதனால் அடைய வேண்டிய லாபத்தையும் அடைய முடியும். விரும்பிய இட மாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
ரிஷபம்: இன்று திறமைகளை வெளிபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையப் பெற்று உயரதிகாரிகளின் பாராட்டுதல்களையும் பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம். சில தடைகளுக்குப் பின் நிறைவேறும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
மிதுனம்: இன்று தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கேற்ற லாபத்தினை தடையின்றிப் பெறுவீர்கள். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் எதிர்பார்த்த அனுகூலத்தினைப் பெற முடியும். வெளியுர் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் கிட்டும். கூட்டாளிகளிடம் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கடகம்: இன்று தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியும் பெருகும். புதிய நவீனகரமான பொருட்களையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
சிம்மம்: இன்று பிள்ளைகளிடம் சற்று அனுசரித்து செல்வது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும் பொருளாதார நிலையும் சிறப்பாக அமையும். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் கிடைக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமான இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3
கன்னி: இன்று பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறையிலிருப்போர்களுக்கும் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். அரசியல்வாதிகள் தங்களது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6
துலாம்: இன்று கொடுத்த வாக்குறுதிகளைக் நிறைவேற்றுவதில் சில தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக செலவுகளும் செய்வீர்கள். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். எதிர்பாராத திடீர் பதவி உயர்வுகளும் கிடைக்கப் பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
விருச்சிகம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை, ஞாபகமறதி ஏற்படக் கூடிய காலம் என்பதால் முழு முயற்சியுடன் பாடுபடுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையும் பொழுது போக்கும் உங்கள் வாழ்க்கையை திசை மாற்றும் என்பதால் பெற்றோர் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடப்பது நல்லது. உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7
தனுசு: இன்று பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6
மகரம்: இன்று தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் லாபமும் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். பயணங்களால் நற்பலன்கள் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
கும்பம்: இன்று குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள், பிள்ளைகளால் மனசஞ்சலங்கள் ஏற்படும் என்றாலும், எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திக்க வேண்டி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 3
மீனம்: இன்று உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பாராத இடமாற்றங்கள் ஏற்படும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.. அலைச்சல் டென்ஷன் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6
FRIDAY - Trailer , Dheena , Anish Masilamani , Mime Gopi , Hari Venkatesh ,…
Galatta Family Trailer , Vimal , Anicka Vickram , Thambi Ramaiya , Mottai Rajendran ,A.Sarkunam…
Nellai Boys Trailer | White Screen Production | V.Raja | Arivazhagan , Hema Rajkumar |…
Dashamakan - Title UNLOCKED , Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael https://www.youtube.com/watch?v=0fs_1ampVWw…
Anjaan - Re-Release Trailer , Suriya, Samantha , Yuvan Shankar Raja , N. Lingusamy …
Akhanda 2 Thaandavam Trailer (TAMIL) | Nandamuri Balakrishna | Boyapati Sreenu | ThamanS | DEC…