Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 02– 03 – 2024

மேஷம்: இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக் கடந்த காலங்களில் இருந்து வந்த தடைகள், போட்டிகள், முன்னேற்றமற்ற நிலை போன்ற யாவும் விலகி நல்ல மேன்மை உண்டாகும். லாபத்தையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

ரிஷபம்: இன்று புதிய வாகனம் சேரும். ஆபரணங்கள் சேர்க்கை சேரும். தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். அலுவலகம் செல்வோருக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெண்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவர் மற்றும் புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

மிதுனம்: இன்று கலைத்துறையினருக்கு எதிலும் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம் சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கல்விக்காக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி கிட்டும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். மனதில் உற்சாகம் பெருகும். உதவி செய்யாத சகோதரர்கள் முன்வந்து உதவுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

கடகம்: இன்று ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். கடன்கள் அனைத்தும் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம்: இன்று புதிய ஒப்பந்தங்கள் எதில் கையெழுத்திடுவது என்றாலும் அதிலுள்ள ஷரத்துகளை கவனமாக படித்து பின் கையோப்பமிடவும். எதை செய்வதாயிருந்தாலும் தகுந்த ஆலோசனை பெறவும். தொழிலதிபர்கள் தொழிலாளிகளின் ஒற்றுமையால் இரண்டு பங்கு லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளின் கடன் பாக்கிகள் வசூலாகி, வியாபாரமும் லாபத்தோடு நடக்கும். அரசியல்வாதி கள் பொதுமக்களிடையே நல்ல பெயர் எடுப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

கன்னி: இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவர்களின் ஆதரவால் வெற்றிகள் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவு இருக்கும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளின் அரவணைப்பையும் பாராட்டையும் பெறுவார்கள். உடன் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் எச்சரிக்கை தேவை. மாணவ- மாணவியர் கல்வியில் நல்ல மேன்மையான நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

துலாம்: இன்று பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனது நிதானத்தால் அனைவரையும் வசீகரிப்பீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குக் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தக்கசமயத்தில் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

விருச்சிகம்: இன்று பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். குடும்பத்தில் எதிர்ப்புகள் விலகும். உடன்பிறந்த சகோதரர்கள், உங்கள் பேச்சைமீறி நடக்கலாம். சொத்துப்பிரச்சினை வரும். உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு: இன்று கூட்டு வியாபாரம் அனுகூலத்தைத் தரும். எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலை நடவடிக்கைகளை நேரடியாக கவனித்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் அதிக கொள்முதல் செய்யாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மகரம்: இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். குடும்ப விவாவதத்தில் கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. குடும்பத்தில் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். விலகியிருந்த பிள்ளைகள் வந்து சேர்வார்கள். காலங்காலமாய் இருந்து வந்த பங்காளி சண்டை முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கும்பம்: இன்று சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். பணியில் தடை ஏற்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

மீனம்: இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

 

admin

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…

5 hours ago

வெளியில் பேசும் கதைகளை கேட்க எனக்கு டைம் இல்லை.. நடிகர் பொன்னம்பலம் விளக்கம்.!!

நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…

5 hours ago

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்!

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…

5 hours ago

ஆண் பெண் இருவருமே சுதந்திரமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…

5 hours ago

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…

5 hours ago

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…

5 hours ago