மேஷம்: இன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. தெய்வ பக்தி அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சலை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் அடைவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
ரிஷபம்: இன்று பெண்கள் இக்கட்டான சூழ்நிலையை துணிவுடன் சமாளிப்பார்கள். நண்பர்கள் உறவினரிடம் நல்லுறவு நீடிக்கும். தொழிலுக்குத் தேவையான பணம் வந்து சேரும். மாணவர்கள் மன அழுத்தம் குறைந்து படிப்பார்கள். அரசாங்கம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
மிதுனம்: இன்று பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். வியாபாரத்தில் லாபம் குறையாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊக்கமுடன் வேலை செய்வீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு பிள்ளைகள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். அரசியல் துறையினருக்கு புதிய பதவி கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
கடகம்: இன்று புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு கிடைக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். வீடு மனைகள் வாங்குவதற்கான தடைகள் அகலும். திறமையாகச் செயல்படுவீர்கள். பாராட்டை அள்ளுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பெண்களுக்கு சுபச் செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
சிம்மம்: இன்று கார் ஓட்டும்போது கவனம் அவசியம். வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்படுங்கள். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் திடீர்ப் பிரச்சினை வெடிக்கும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை வடிவமைப்பீர்கள். உயர்மட்டப் பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். பகையை வென்று தடையைத் தகர்ப்பீர்கள். பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
கன்னி: இன்று சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் நன்மையைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வு அடைவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட மனநிறைவைத் தரும். கடல் கடந்து பிரயாணம் மேற்கொள்வீர்கள். சந்திராஷ்டமம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
துலாம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பயணங்களில் தடை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கவனம் தேவை. வீண் பழியைச் சுமக்க நேரிடும். வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும். முதலாளிகளின் பாராட்டைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டால் உறவுகள் உடைந்து போகும். வியாபாரம் நிதானமாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
விருச்சிகம்: இன்று சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு விலகும். தடை செய்தவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். தொழிலை விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.வேலைக்கு வெடிவைக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகும். புதிய நபர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். எதிர்பாராத செலவு உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
தனுசு: இன்று தொழிலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது எச்சரிக்கை தேவை. அவசரம் காட்டாதீர்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களில் பலன் கிடைக்காது. அதிகாரிகள் உங்களை அலட்சியப்படுத்துவார்கள். வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
மகரம்: இன்று திறமையை மூலதனமாகக் கொண்டு தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். சிக்கலான பிரச்சினைகளில் தெளிவான முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தினர் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் நன்மையைத் தரும். அனைத்து தடைகளும் அகன்று தொழில் விரிவடையும். அரசுப் பணியாளர்கள் அதிக லாபம் அடைவார்கள். குடும்பத்தில் மன நிறைவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கும்பம்: இன்று தைரியமாக எதையும் எதிர்கொள்வீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். கையிருப்பு அதிகரிக்கும். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்காலம் குறித்து திட்டம் தீட்டுவீர்கள்.வியாபாரம் நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
மீனம்: இன்று எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடு லாபத்தைக் கொடுக்கும். அரசாங்கம் மூலம் நடக்கும் காரியங்கள் தடைபடாது. முயற்சிகளில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும்.உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் உண்டாகும். தொழில் ரீதியான பயணங்கள் வெற்றியை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

