Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

title-winner-of-dance-jodi-dance-2 update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்கி வந்தார். மேலும் நடுவர்களாக பாபா பாஸ்கர் மாஸ்டர், சங்கீதா மற்றும் சினேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பாப்புலராகி கலக்கி வந்தது. இந்த நிலையில் 5 ஜோடிகளுடன் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு தினமான நேற்று நடந்து முடிந்தது.

ராகவா லாரன்ஸ் சிறப்பு விருந்தினராக வருகை தர ஸ்ரீதர் மாஸ்டர், சேகர் மாஸ்டர் ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்றனர். 5 போட்டியாளர்களும் பரபரப்பான நடனத்துடன் மேடையை அதிர வைத்து நடுவர்களை கவர்ந்தனர். இறுதியாக இந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையையும் நவீன் – அக்ஷதா ஜோடி வென்றனர்.

மேலும் இப்ராஹிம் – அக்ஷிதா ஜோடி முதல் ரன்னர் அப் இடத்தை பிடிக்க விவேக் – கௌரி ஜோடி 2 ரன்னர் அப்பாக வெற்றி பெற்றுள்ளனர். டைட்டிலை வென்ற நவீன் அக்ஷதா ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

title-winner-of-dance-jodi-dance-2 update
title-winner-of-dance-jodi-dance-2 update