Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எதிர் நீச்சல் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.வைரலாகும் புதிய நேரம்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

ஒளிபரப்பாக தொடங்கியதில் இருந்து இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நேரமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ள காரணத்தினால் எதிர்நீச்சல் இரவு‌ 9.30 மணிக்கும் இனிய சீரியல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Time Change Details of Ethir Neechal Serial update
Time Change Details of Ethir Neechal Serial update