கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களாக விளங்கி வரும் தளபதி விஜய் நடிப்பில் வாரிசும் தல அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி கோலாகலமாக வெளியானது. மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இரு படங்களும் நேருக்கு நேராக போட்டியிட்டு பொங்கல் ரேசில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை அடைந்துள்ளது.
இந்நிலையில் இரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடும் வகையில் இரண்டு படக்குழுவும் போஸ்டர்கள் மூலம் யுத்தம் மேற்கொண்டுள்ளது. அதாவது ‘பொங்கல் வின்னர் வாரிசு’ தான் என்று வாரிசு படக்குழுவும், ‘தி ரியல் வின்னர் துணிவு’ என்று துணிவு படகுழுவும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது இணையதளத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
Posters Ruling Social Media. pic.twitter.com/yIwpbUfMvs
— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 13, 2023