thunivu-telgu-release-title-update
தமிழ் ரசிகர்கள் மத்தியில் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜயின் ‘வாரிசு’ திரைப்படத்துடன் வெளியாகி நேரடியாக மோத இருக்கிறது.
மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உட்பட எக்கச்சக்கமான நடிகர் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இப்படத்திற்கான அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரிசு திரைப்படத்துடன் போட்டி போட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, தமிழில் ‘துணிவு’ என்னும் தலைப்பில் இருக்கும் இப்படம் தெலுங்கில் ‘தெகிம்பு’ என்ற பெயரில் வெளியாக இருப்பதை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் twitter பக்கத்தில் புதிய போஸ்டருடன் தெரிவித்துள்ளது. மேலும் தெகிம்பு திரைப்படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை ராதா கிருஷ்ணா என்டர்டைன்மெண்ட்ஸ் மற்றும் IVY புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றிருப்பதையும் அப்பதிவின் மூலம் அறிவித்துள்ளது. இந்த தகவலால் அஜித், விஜய் ரசிகர்கள் மத்தியில் இரண்டு படங்கள் மீதுள்ள எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக அதிகரித்து வருகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…