Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துணிவு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்

thunivu movie release date update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

புத்தாண்டு தின விருந்தாக கடந்த சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த ட்ரெய்லரில் கூட படம் பொங்கல் ரிலீஸ் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்ததே தவிர படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பது அறிவிக்கப்படவில்லை.

இப்படியான நிலையில் ஐநாக்ஸ் திரையரங்கம் மற்றும் பிவிஆர் திரையரங்கம் தங்களது சமூகவலைதள பக்கத்தில் துணிவு திரைப்படம் திரையரங்குகளில் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். மேலும் துணி பட குழு வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.