Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துணிவு படம் படைத்த ஐந்து சாதனைகள். முழு விவரம் இதோ

thunivu movie record update

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் துணிவு.

பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வரை துணைவி படம் படைத்த சாதனைகள் என்னென்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.

1. முதல் நாளில் அதிகபட்சமாக 24 கோடி ரூபாய் வசூல் செய்து முதல் சாதனை படைத்தது துணிவு.

2. முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது.

3. அடுத்ததாக ஏழு நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை பெற்று சாதனை படைத்தது

4. ஓவர் சீஸ் வசூலில் அஜித்தின் திரைப்பயணத்தில் அதிகமாக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை துணிவு படைத்துள்ளது.

5. தமிழகத்தில் மட்டும் ஏழே நாளில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து திரையரங்குகளில் துணிவு படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

thunivu movie record update
thunivu movie record update