Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இறுதிக்கட்டத்தை நெருங்கிய துணிவு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

thunivu movie nears the final stages of shooting update

தென்னிந்திய திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படம் குறித்த புகைப்படங்கள் மற்றும் அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை குஷி குத்துப்படுத்தியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள ‘சில்லா சில்லா’ பாடலின் படப்பிடிப்பு இந்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைகிறது. மேலும் இந்தப் பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு பொங்கல் வெளியீட்டுக்கு திரையரங்குகளை புக் செய்யும் பணிகளை துணிவு படக்குழு தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

thunivu movie nears the final stages of shooting update
thunivu movie nears the final stages of shooting update