கோலிவுட் திரை உலகில் அஜித் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி பிரபல இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் எச் வினோத். இவர் வலிமை, நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் அஜித்துடன் இணைந்து துணிவு திரைப்படத்தை இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kamal Haasan – Vijay Sethupathi ????
Directed by H Vinoth.
Produced by @RKFI.#KH233 pic.twitter.com/Kl12h7bqrf
— LetsCinema (@letscinema) November 16, 2022

