கோலிவுட் திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த மாதம் 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன், அமீர், பாவனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வரும் இப்படம் குறித்த பல மேக்கிங் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் இப்படத்தின் முக்கியமான பகுதியான பேங்க் செட்டபின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
#Thunivu Set Work ????
YOUR BANK,HIS RULES #AK ????#ThunivuOnNetflix #AK62#BlockbusterThunivu #AjithKumar pic.twitter.com/6dSczj2vuh
— Singapore Thala Ajith Fans Club (@Singapore_TFC) February 10, 2023