கோலிவுட் திரை உலகில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருந்த “துணிவு” திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியானது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது.
அதன் பிறகு Netflix தளத்திலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களால் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் 100 வது நாள் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களால் சமூக வலைதள பக்கங்களில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.
#Thunivu100Days paper advt ????#AK #HVinoth @BoneyKapoor pic.twitter.com/l96knUZ8Jf
— ???????? ???????? ????-???????????????? (@tn_ajith) April 19, 2023