Three romantic films to be re-released on Valentine's Day, FEB 14!
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்!
சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம் ‘மௌனம் பேசியதே. 23 ஆண்டுகள் கழித்து பிப்ரவரி 13-ந்தேதி ரீ ரிலீஸாக உள்ளது.
23 ஆண்டுகளாகியும் இன்றும் தங்களுக்கு பிடித்த படம் என்று திரை ஆர்வலர்கள் பலரும் சொல்கிறார்கள். இது பற்றி சூர்யா தெரிவிக்கையில், ‘3 ஹீரோயின்கள் இருந்தாலும் கட்டிப்பிடிக்கும் காட்சி இல்லை. ரசிகர்களுடன் சேர்ந்து ஒரு ஷோவாவது பார்க்க ஆசையில் இருக்கிறேன். பிப்ரவரி 13-ந்தேதி ரிலீஸாகிறது. உங்களை தியேட்டரில் பார்க்கிறேன்’ என கூறியிருக்கிறார். அவரது ரசிகர்களால் இந்த தகவல் வைரலாகி வருகிறது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகமான படம் ‘மின்னலே’. இப்படத்தில் மாதவன், அப்பாஸ், ரீமாசென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படமும் ரீ ரிலீஸாக உள்ளது.
இந்த படம் ரிலீஸாகி 25 ஆண்டுகளானாலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் இன்றும் வரவேற்பு பெற்று வருகிறது.
இது தவிர, கதிர் இயக்கத்தில் குணால், சோனாலி பிந்த்ரே உள்ளிட்டோர் நடிப்பில் 27 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸான ‘காதலர் தினம்’ படம் பிப்ரவரி 14-ந்தேதி ரீ ரிலீஸாகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எவர்கிரீனாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்புறமென்ன காதலர்களுக்கு செம குஷிதான்.!
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்”…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “Jailer 2” படம், ஓடிடி உரிமை ஒப்பந்தத்தில்…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான…
இந்தியாவின் ரா (RAW) உளவு அமைப்பில் பணியாற்றும் சரத்குமார், அணு ஆயுதத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளை பல ஆண்டுகளாக பாதுகாத்து…
SINGHA Official Teaser | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran | Adithya Kathir
Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…