Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

திருச்சிற்றம்பலம் திரை விமர்சனம்

Thiruchitrambalam Movie Review

பள்ளி, கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் வீடு, வேலை என்று சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் தனுஷ். உணவு டெலிவரி பாயாக வேலை செய்யும் தனுசுக்கு, சோகங்கள், சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளும் தோழியாக நித்யா மேனன் இருக்கிறார். சந்தோஷமாக செல்லும் இவரது வாழ்வில் ஒரு சில காதல் குறிக்கிடுகிறது. அந்த காதல் கைக்கூடியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் தனுஷ் சாதாரண டீசர்ட் போட்டுக் கொண்டு பக்கத்து வீட்டு பையனாக கதைக்கு பொருந்தும் நடிப்பை கொடுத்துள்ளார். தாத்தாவை நண்பனாக டீல் செய்யும் இவரது உடல் மொழி ரசிகர்களை கவர்ந்துள்ளது. நித்யா மேனன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கேர்ஸ் பெஸ்டிக்கான ஒரு அர்த்தத்தை கொடுத்துள்ளார். இவரின் நடிப்பு படத்தை மேலும் ரசிக்கும் படி செய்துள்ளது. ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பினை கொடுத்திருக்கின்றனர். கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், அனுபவத்திற்கு ஏற்ற நடிப்பினை கொடுத்துள்ளார். தாத்தாவாக நடித்திருக்கும் பாரதிராஜா மிகவும் வித்தியாசமான ஒரு ஜாலியான கேரக்டரில் நடித்துள்ளார்.

நக்கல், லொள்ளு என புதுமையை கடைப்பிடித்துள்ள பாரதிராஜாவின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்துள்ளது. சாதாரண ஒரு கதையை மிகவும் வித்தியாசமாக கொடுத்துள்ளார் இயக்குனர் மித்ரன். தெளிவான திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் மெருகேற்றியிருக்கிறார். ஒளிப்பதிவில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார் ஓம் பிரகாஷ். மொத்தத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ பலம்.

 Thiruchitrambalam Movie Review

Thiruchitrambalam Movie Review