Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷின் அசுரன் படத்தை பின்னுக்குத் தள்ளி திருச்சிற்றம்பலம் படைத்த சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்

thiruchitrambaalam movie details

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இதில் தனுஷ் உடன் இணைந்து பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசிகண்ணா போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் உடன் இணைந்து அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் கடந்த 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரையரங்கில் வெளியானது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து தனுஷின் திரைப்படம் திரையரங்கில் வெளியானதை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 9.25 கோடி வசூல் செய்திருந்தது.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்து வருகிறது. இதற்கு முன் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை 10 நாட்களில் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் நான்கே நாட்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

thiruchitrambaalam movie details
thiruchitrambaalam movie details