Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எதிர் நீச்சல் சீரியல் குறித்து பேசிய இயக்குனர் திருசெல்வம்,வைரலாகும் தகவல்

சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று ஒரு கட்டத்தில் அந்த வரவேற்பு அப்படியே நெகட்டிவாக மாறி சமீபத்தில் முடிவுக்கு வந்த சீரியல் எதிர்நீச்சல்.

திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பான இந்த சீரியல் நான்கு பெண்களின் கதையை மையமாக கொண்டதாக ஒளிபரப்பாகி வந்தது. டிஆர்பி ரேட்டிங் குறைந்து கொண்டே வந்த காரணத்தினால் தொலைக்காட்சி நிறுவனம் திருச்செல்வத்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அதனால் இந்த சீரியல் முடிவுக்கு வந்ததாக தகவல் பரவியது.

இந்த சீரியலில் நடித்த பாம்பே ஞானம் கூட இதை காரணமாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருச்செல்வம் சீரியல் முடிவு குறித்து முதல்முறையாக பேட்டி கொடுத்துள்ளார். அதாவது தொலைக்காட்சி தரப்பிலிருந்து வருத்தம் தெரிவித்தது உண்மைதான். ஆனால் முடிக்க வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களுக்கு டிஆர்பி முக்கியம் எனக்கு அது முக்கியமில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த சீரியலை வேறொரு கோணத்தில் கொண்டு செல்லலாம் என்ற முடிவோடு தான் முடிவுக்கு கொண்டு வந்தேன். புதிய கதையுடன் மீண்டும் சந்திப்பேன். அது எதிர்நீச்சல் 2-ஆக இருக்கும் என நம்புவதை விடவும் வேறு ஒரு கோணத்தில் இருக்கும் என நம்பலாம் என்று தெரிவித்துள்ளார்.

Thiru Selvam about ethir neechal serial
Thiru Selvam about ethir neechal serial