Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஷம் கொடுத்து என்னை கொல்ல பார்த்தனர்- பிரபல வில்லன் நடிகர் புகார்

They tried to kill me with poison - famous villain actor complains

தமிழில் கண்ணத்தில் முத்தமிட்டால், கச்சேரி ஆரம்பம், அரிமா நம்பி, காரி போன்ற பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் ஜே.டி.சக்ரவர்த்தி. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னை விஷம் கொடுத்து கொல்ல சதி நடந்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ”எனக்கு சில மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனக்கு மது, சிகரெட், போதைப்பொருள் கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. ஆனாலும் மூச்சுவிடவே சிரமப்பட்டேன். இந்தியா, இலங்கையில் சிகிச்சை எடுத்தும் என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாகிவிட்டது.

இனி பிழைப்பது கஷ்டம் என்று மருத்துவர்கள் கைவிட்டனர். அப்போது நாகார்ஜுனா என்ற மருத்துவர் எனக்கு ஏன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பதை கண்டுபிடித்தார். எனக்கு தெரிந்த ஒருவர் 8 மாதங்களாக எனக்கு ஒரு கசாயம் கொடுத்து வந்தார். அதில் விஷம் கலந்து கொடுத்து இருப்பதை அந்த மருத்துவர் கண்டுபிடித்தார்” என்றார்.