Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

KGF 2 மற்றும் பீஸ்ட் படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாக உள்ளது? வெளியான லேட்டஸ்ட் தகவல்

Theater Count of Beast And KGF2 Movies

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து மறுநாள் அதாவது ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இதனால் தமிழகத்தின் இரண்டு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவ உள்ளது.

இரண்டு படங்களுமே வானளவு எதிர்பார்ப்பை கொண்டுள்ள படங்களாக இருப்பதால் எந்த படம் ஜெயிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் இந்த திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்வளவு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. கிட்டத்தட்ட இந்த படம் 800 திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து மறுநாள் வெளியாக உள்ள கேஜிஎப் திரைப்படத்திற்கு தமிழகத்தில் 200 திரையரங்குகளில் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 200 திரையரங்குகளில் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய்யும் பீஸ்ட் திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அதேபோல் கே ஜி எஃப் 2 படத்தினை எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‌‌

Theater Count of Beast And KGF2 Movies
Theater Count of Beast And KGF2 Movies