தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் ஷாலினி பாண்டே. அதன்பிறகு மேரி நிம்மோ என்ற இந்தி படத்தில் நடித்தார். தமிழில் 100 பிரசண்ட் காதல் படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
தற்போது ஷாலினி பாண்டே அமீர்கானின் மகன் ஜுனைத் கான் அறிமுகமாகும் மகாராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சித்தார்த் மல்ஹோத்ரா இயக்குகிறார். 1982ம் ஆண்டு நடந்த பிரிஜ்நாத்ஜி மகராஜ் வழக்கை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது. இதில் ஜுனைத் கான் பத்திரிகையாளராக நடிக்கிறார். ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.

