The villain actor gave the valimai update
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து எச் வினோத்- அஜித் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இறுதியாக, சண்டைக் காட்சி ஒன்றை வெளிநாட்டில் படமாக்கப் படக்குழு பயணிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
தற்போது இதுகுறித்துத் தெளிவான தகவலை படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “நான் சந்தித்ததிலேயே மிகவும் எளிமையானவர் அஜித். அவருடன் ‘வலிமை’யில் நடித்திருந்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. இன்னும் ஒரு சேசிங் காட்சியை ஸ்பெயின் நாட்டில் படம் பிடிக்கவுள்ளோம். ஸ்பெயின் அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்” என்று கார்த்திகேயா கூறியுள்ளார்.
இந்தப் படப்பிடிப்பு 3 நாட்கள் என்றும், இது முடிந்தால் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் தெரிகிறது. முன்னதாக, மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கும் என்றும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Lenin Pandiyan Official Trailer | Isaignani Ilaiyaraaja | Gangai Amaran | Roja | Dhaarshan Ganesan
கோடை வெப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளின் தாகத்தை தணிக்க, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சிறப்பான…
நடிகரும் இசையமைப்பாளருமான G. V. Prakash Kumar, புதிய திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக மாறவுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக…
இயக்குநர் R. J. Balaji இயக்கத்தில் Suriya நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் தொடர்ந்து அப்டேட்களால் கவனம் ஈர்த்து…
தமிழ் திரையுலகில் முன்னேறி வரும் நடிகர்களில் ஒருவரான Harish Kalyan, தனது குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.…
தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவரான Kavin, தனது புதிய படம் ‘ஹாய்’ மூலம் மீண்டும்…