The teaser of Jason Sanjay's 'Sigma' has been released and is receiving a good response from the fans.
‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ந்தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில தினங்களுக்கு முன்பாக, தேதியில் மாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவ்வகையில், ஜனவரி 10-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் ‘பராசக்தி’ ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக அளித்துள்ள விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஜனவரி 14-ந்தேதி ரிலீஸ் என கூறிவிட்டு, தற்போது முன் கூட்டியே படத்தை வெளியிடுவதற்கு எந்த காரணமும் கிடையாது. ஜனவரி 9-ந்தேதி 900-க்கும் அதிகமான திரைகளில் ஜனநாயகன் ரிலீசானால், அடுத்ததாக 14-ந்தேதி ‘பராசக்தி’ படம் வெளியாகும்போது தியேட்டர்கள் ஒதுக்குவதில் விநியோகஸ்தர்களுக்கு சிக்கல் ஏற்படும். ஜனவரி 10-ந்தேதியில் ‘பராசக்தி’ ரிலீசாகும்போது, இரண்டு படங்களுக்கும் சமமான திரைகள் ஒதுக்கப்படும். இதன் காரணமாகவே வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.
பராசக்தி, ஜனநாயகன் ஆகிய இரு படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்றால், பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவிக்கும் எனவும் திரையுலகை சார்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில் சென்னையில் ‘பராசக்தி’ படத்துக்கான இசை வெளியீட்டு விழாவை ஜனவரி முதல் வாரத்தில் நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இப்படம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக 1960 காலக்கட்டத்தில் நடக்கும் பீரியட் பிலிமாக உருவாகியுள்ளது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…