இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்ததில்லை என்று படக்குழு கூறியுள்ளது
யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை கே.வி.என்.நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்குப் பிறகு வெளியாகும் யாஷ் நடித்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மார்ச் 19-ந்தேதி இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது ‘டாக்ஸிக்’ படத்திலிருந்து நயன்தாராவின் லுக் மற்றும் அவருடைய கதாபாத்திரத்தின் பெயருடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் கங்கா என்னும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.
இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்ததில்லை என்கிறது படக்குழு. மேலும், இப்படத்தில் அவருடைய நடிப்பே ஒரு வலுவான அடையாளமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நயன்தாரா கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கீது மோகன்தாஸ் தெரிவிக்கையில், ‘நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைப்பட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம். ஆனால் ’டாக்ஸிக்’ படத்தில், இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்திய உள்ளார்.
அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில்தான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார். அதைவிட அழகானது, அந்த பயணத்தில் ஒரு நெருங்கிய நண்பரையும் நான் பெற்றேன்’ என தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, ஹூமா குரோஷி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…