ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!
விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்ஷன் அட்வென்சர் காமெடி திரைப்படமான இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக்ஜேபி, சம்பத் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு உள்பட பன்மொழிப் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும் வருகிற 23-ந்தேதி டீஸர் வெளியாகும் என்றும் லைகா நிறுவனம் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
‘இப்படம் சமூகத்தால் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத ஒருவன், தன் இலக்குகளை நோக்கி நகர்வதைப் பேசும். வேட்டை, கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும்’ என இயக்குநர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இச்சூழலில் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27-ந்தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளது.


