தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் தள்ளி போய் உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ளதால் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது என்றும் யாருக்கும் அடிபணிந்திருக்க மாட்டேன் அதுக்காக நான் அரசியலுக்கு வரல என்று அவரது கருத்தை பகிர்ந்து இருந்தார்.
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருணாஸிடம் கேட்டபோது அவர் ஒவ்வொரு நேரமும் ஒன்னு ஒன்னு சொல்லிக்கிட்டு தான் இருக்காரு அவர் வெளிநாட்டு காருக்கே வருமானம் வரை கட்டாமல் இருந்தவர் என்றும் இதை யாரும் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


