“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” – எஸ்.ஏ.சந்திரசேகர் சூசகம்

“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” – எஸ்.ஏ.சந்திரசேகர் சூசகம்

விஜயகாந்த் மகன் சட்முகப் பாண்டியன் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘கொம்பு சீவி’ படத்தில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.வரும் 19-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில்,

‘கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் கொம்பு சீவி என தெரியவில்லை. இரண்டு பேரும் அந்த அளவிற்கு இருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் கண்களில் ஒரு நெருப்பு இருக்கும், ஒரு வேகம் இருக்கும். அந்த நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது.

இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நகைச்சுவையை விட வேகம் – ஆக்‌ஷன் அதிகம் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில், இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால், பொன்ராம் என்னுடைய பிள்ளைகளில் ஒருவர்.

இயக்குநர் ஒரு இளைஞர், ஹீரோ ஒரு இளைஞர், சரத்குமார் ஒரு இளைஞர், இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா ஒரு இளைஞர். இப்படி இளைஞர்கள் புதிய வேகத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

உலகத்திற்கே உரிய ஒரு சரித்திரம் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. அது எல்லாத் துறையிலும் உண்டு. சமூகம், அரசியல், திரைத்துறை என எல்லாத் துறையிலும் இது உண்டு.

எனக்குத் தெரிந்து திரையுலகில் ஒரு காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் – பி.யு. சின்னப்பா, அதற்குப் பிறகு எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி – கமல், அதற்குப் பிறகு இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது. இது காலத்தின் கட்டாயம். ஆகவே மாற்றத்திற்குரிய இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும். ஏனெனில், இந்த இளைஞர்களும், தமிழகத்தில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த திரைப்படத்திலும் நிகழ வேண்டும்’ என எஸ்.ஏ.சந்திரசேகர் சூசகமாகவும் பேசியுள்ளார்.

“The people of Tamil Nadu want change” – S.A. Chandrasekhar Susakam
dinesh kumar

Recent Posts

விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து!

விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து! கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்,…

2 hours ago

‘பராசக்தி’ படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல்

'பராசக்தி' படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’…

2 hours ago

‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி

‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' படத்தில் சிறந்த நடிப்பை…

3 hours ago

மக்​களைத் தவறாக வழி நடத்துவதா? – ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை

மக்​களைத் தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச்…

3 hours ago

‘ஜெயிலர் 2’ – சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை?

'ஜெயிலர் 2' - சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை? சூப்பர் ஸ்டார் ரஜினி​காந்த் நடிக்​கும் ‘ஜெயிலர் 2’…

3 hours ago

வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த நடிகை ஜாங்கிரி மதுமிதா

டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் உள்ளது. புதிதாக…

5 hours ago