Leading company buys OTT rights of Parasakthi for a huge amount
பராசக்தி படத்தின் ஓடிடி உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய முன்னணி நிறுவனம்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ’பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதன் ஓடிடி உரிமம் விற்கப்படாமல் இருந்தது. இப்படத்தின் உரிமையினை ஓடிடி நிறுவனங்கள் வாங்க தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகின.
ஏனென்றால், இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் நடந்த கதை எனவும் கூறப்பட்டது. இதனிடையே, ஜீ5 நிறுவனம் ‘பராசக்தி’ படத்தின் ஓடிடி உரிமையை பெற்றுள்ளது. இந்த உரிமையினை ரூ.52 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக விலைக்கு விற்பனையான ஓடிடி உரிமம் என்றால் ‘பராசக்தி’ படம்தான் எனவும் குறிப்பிட்டு உள்ளார்கள். இதன் தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் டிவி பெற்றுள்ளது.
இதன் மூலம் அனைத்து உரிமைகளும் விற்பனையாகி விட்டதால், ஜனவரி 14-ந்தேதி ‘பராசக்தி’ படத்தை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக வருகிறார். அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்பட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்துள்ளார். விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இரு படங்களும் களத்தில் இறங்குவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Jolliya Iruntha Oruthan Teaser | JIO | Jiiva, Sudhakar | Yuvan Shankar Raja | Rajesh…
Oh Sukumari Lyrical Video (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath | Bharath Manchiraju
Con City Official Trailer | Arjun Das | Anna Ben | Yogi Babu | Sean…
Nagabandham Tamil Official Trailer | Abhishek Nama | Virat Karrna | Nabha Natesh
Rise Of Linga Lyric Video | Magudam (Tamil) | Vishal | GV Prakash | Anjali…
Black Gold Official Trailer | Vetri, Priyalaya | Dheeran Arunkumar | Gavaskar Avinash