Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“ஆடு ஜீவிதம்” படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு.வைரலாகும் பதிவு

the-goat-life-movie release date update

“மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தற்போது ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ஆடு ஜீவிதம் போஸ்டர்இந்நிலையில், ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.