கொரோனா நோய் காரணமாக இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் லாக் டவுன் இருந்தது. இப்போது தான் நோயின் தாக்கங்கள் கொஞ்சம் குறைய வேலைகளை மக்கள் தொடங்கியுள்ளனர்.
இதுநாள் வரை தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைக்காமல் இருந்தது, தற்போது இன்றில் இருந்து திறக்கப்பட்டுள்ளது.
புதுப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை, மாறாக முன்னணி நடிகர்களின் பழைய படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. பிரபல திரையரங்கான ஏஜிஎஸ் இல் விஜய்யின் பிகில் திரையிடப்பட இருக்கிறது.
இந்த லாக் டவுன் பிறகு நான் பார்க்கப்போகும் படம் பிகில் தான் என அத்திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டுவிட்டரில் கூறியுள்ளார்.
Yes ???? first movie I am going to watch after lockdown @agscinemas GNC today ❤️
— Archana Kalpathi (@archanakalpathi) November 10, 2020

