The director of 'Dude' who will direct Simbu?
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்?
சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அரசன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.
அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். இப்படங்களை முடித்தவுடன் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சிம்பு.
‘ட்யூட்’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. சிம்புவின் தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தமாக கையெழுத்திட முடிவு செய்திருக்கிறது. சிம்பு, கீர்த்தீஸ்வரன் சந்திப்பு முடிவடைந்து, அவர் கூறிய கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்புக்கு செல்வார்கள் என கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘ட்யூட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கீர்த்தீஸ்வரன். அப்படம் வரவேற்பை பெற்றதால் அந்த இயக்குநரின் அடுத்த படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது.
தற்போது ‘அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த இடைவெளியில் சிம்பு ஏஐ தொழில் நுட்பம் பயிலும் ஆர்வத்திலும் உள்ளார்.
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…
ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு! மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகம் படத்தில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடை விடுமுறையை…