இளநீர் அதிகம் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து பார்க்கலாம்.
கோடை காலம் தொடங்கி விட்டாலே நீரேற்றம் நிறைந்த பழ வகைகள் மற்றும் குளிர்பானங்களை குடிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். அப்படி பொதுவாகவே அனைவரும் விரும்பி குடிப்பது இளநீர். இது உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக குடிக்கும் பொழுது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளும் ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
இளநீர் அதிகமாக குடித்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் பக்கவாதம் வர வாய்ப்பு உள்ளது. இது மட்டும் இல்லாமல் குறைந்த ரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
மேலும் சரும பிரச்சனை மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை வரவும் வாய்ப்பு அதிகம்.
எனவே உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவாகவே இருந்தாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.