சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தட்றோம் தூக்றோம்

மீடியா மார்ஷல் தான் தயாரித்த தட்றோம் தூக்றோம் என்ற தமிழ் திரைப்படம் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துகொள்கிறது.

“தட்றோம் தூக்றோம்” 2016ம் வருடம் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுக்கள் பணமதிப்பு இழப்பை மையப்படுத்தி தயாரிக்கபட்ட கற்பனை கலந்த திரைப்படம்.

இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்த தீ ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நாயகி பௌசி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சீனு மோகன், காளி வெங்கட், லிங்கா, மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கபிலன் வைரமுத்து வசனம் பாடல்கள் எழுத புதுமுக இயக்குநர் அருள் S இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்திற்க்கு பாலமுரளி பாலு இசை அமைக்க சிலம்பரசன் படத்தின் மிக முக்கியமான கபிலன் வைரமுத்து எழுதிய பணமதிப்பிழப்பு பாடலை பாடியுள்ளார்.

படத்தின் டிரெய்லர் ஏற்கனவே இணைய தளத்தில் வெளியிடபட்டு பத்து லட்சம் பார்வையாளர்களுக்கு கடந்துவிட்டது குறிப்பிடதக்கது. படம் தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,

இந்த கொரோனா நேரத்தில் இந்த படம் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கபட்டிருக்கும் செய்தி படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது,

இந்த பட விழாவில் தேர்ந்தெடுத்ததற்க்கு டொராண் டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழா குழுவினருக்கும் மற்றும் அனைவருக்கும் மீடியா மார்ஷல் மனமார்ந்த நன்றியை தெறிவித்து கொள்கிறது. தட்றோம் தூக்றோம் விரைவில் தியேட்டர்களில் வெளியிடப்படும் என்பதை தெறிவித்து கொள்கிறோம்.

admin

Recent Posts

ஜன நாயகன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…

1 day ago

Rasagulla Video Song

Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…

1 day ago

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

2 days ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

2 days ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

2 days ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

2 days ago