தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் தற்போது சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படம் கேஜிஎப் படத்தில் இடம்பெறும் மனிதர்களின் வாழ்க்கையை பற்றியதாக இருக்கும் என முன்னதாகவே இயக்குனர் பா.ரஞ்சித் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். தற்போது படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பிஸியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் அளித்திருக்கும் லேட்டஸ்டான பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர், தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது, இதற்காக ஈவிபி ஃபிலிம் சிட்டியில் ஒரு செட் அமைக்கப்பட்டிருக்கிறது ரொம்ப நல்லா வந்திருக்கு. விக்ரம் சார் பயங்கரமா நடிக்கிறாரு, ஒரு 19th செஞ்சுரிக்குள்ள போன அனுபவத்தை கொடுத்துக்கிட்டே இருக்காரு. படம் வந்து மக்களுக்கு பிடிச்ச படமா இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்பு ஈவிபி செட்டில் நடைபெற்று வருவதை தொடர்ந்து அடுத்த கட்டமாக கே ஜி எஃப் மற்றும் பூனே ஆகிய இடங்களில் எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
#Thangalaan update #ChiyaanVikram sir bayangarama nadikraru
19th century apdiyae kondu vararu
????????????????????????????@beemji @chiyaan @StudioGreen2 @gvprakash pic.twitter.com/KQxNWKHAtn— ThangalaanOffl (@ThangalaanOffl) December 30, 2022

