தொடரும் தளபதி 69 இயக்கப் போகும் இயக்குனர்களின் லிஸ்ட்.. இந்த முறை யார் தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் “தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்” (கோட்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் துவங்கும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளதாக அறிவித்தார். மேலும் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர்சூட்டியிருப்பதாக அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பில், தற்போது நடித்து வரும் கோட் படம் தவிர்த்து, மற்றொரு படத்தில் நடிக்க இருப்பதை விஜய் உறுதிப்படுத்தி இருந்தார்.

மேலும், இந்த படத்தின் பணிகளில் அரசியல் கட்சி பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்து இருந்தார். எனினும், இந்த படத்தின் இயக்குனர் பற்றி எவ்வித தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக விஜய் நடிக்கும் 69 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகின.இதோடு, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை இயக்கிய வினோத் விஜய்யின் 69-வது படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படம் அரசியல் கதைக்களம் கொண்டு உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து விஜய்யின் 69 படத்தை வெற்றி மாறன் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில், விஜய் 69 படத்தின் இயக்குனர்கள் பட்டியலில் புதிய பெயர் இணைந்துள்ளது. அதன்படி தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் என முன்னணி நடிகர்களை இயக்கிய த்ரிவிக்ரம் விஜய்யின் 69-வது படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.”,

thalapathy69 director new details update viral
jothika lakshu

Recent Posts

Dayangaram Official Teaser

Dayangaram Official Teaser | VJ Siddhu | Siddhu Kumar | Dr. Ishari K Ganesh |…

18 hours ago

O Mysaa Re Lyrical Video

O Mysaa Re Lyrical Video | Mysaa | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy|…

18 hours ago

John Doe Official Trailer

John Doe Official Trailer | Arjun Das, Sanchana Natarajan | Madhumita | Arka Mediaworks |…

18 hours ago

ஜெயிலர் 2 படத்திலிருந்து சந்தானத்தின் காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னணி…

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல…

20 hours ago

மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா – தனுஷ் இணையும் புதிய படம்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் தனுஷ் இருவரும் முதன்முறையாக ஒரே திரைப்படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர்…

21 hours ago

நவம்பர் 6-ல் தனுஷின் ‘ஓம்’ பட இசை வெளியீட்டு விழா… சென்னையில் பிரம்மாண்ட ஏற்பாடு!

நடிகர் தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஓம் - சாப்டர் 1: உதிரம் - தி பிளட் வுட்’…

21 hours ago