விஜய் மற்றும் ராஸ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்கு தற்காலிகமாக வைத்திருக்கும் பெயர்தான் தளபதி 66 . இப்படத்தை இயக்குனர் வம்சி படைபள்ளி இயக்கிக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதைப்போல் இப்படத்திற்கான தலைப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் தளபதி 66 என்ற படம் தமிழில் “வாரிசு” என்றும் தெலுங்கில் “வாரிசுடு” என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
