தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார் விஜய்.
தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என தகவல் பரவிய நிலையில் அதனை கீர்த்தி சுரேஷ் மறுத்துவிட்டார். அதன் பின்னர் ராஷ்மிகா மந்தண்ணா நடிக்கிறார் என்று கடந்த வாரம் தகவல் பரவியது.
அதுமட்டுமல்லாமல் மீண்டும் பூஜா ஹெக்டே விஜயுடன் ஜோடி சேர்கிறார் எனவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக இவர்கள் யாரும் நடிக்கவில்லை எனவும் தனுசுக்கு ஜோடியாக பட்டாசு படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சாடா தான் நடிக்கப் போகிறார் என தகவல் பரவ தொடங்கியுள்ளது.
தெலுங்கில் இவர் பிரபலமாக இருந்து வருவதால் இவர் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எதற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருப்போம்.
