thalapathy vijay-video-goes-viral
“இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கோட்’ (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் என விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘தி கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவளத்தில் பிரம்மாண்ட வீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு இந்த மாதம் இறுதி வரை கோவளத்தில் நடைபெறும் என்றும் அதன் பின்னர் ராஜஸ்தானில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை கண்டு ஆர்ப்பரித்த ரசிகர்களை பார்த்து விஜய் கையசைத்தார். தாடி, மீசை எதுவும் இல்லாமல் இளைஞர் போன்று விஜய் இருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.”,
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…
நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…
அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…
நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார். வனவிலங்கு பொருட்களை…
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…